மகிழ்நன்,
வரும் சனவரி 15-ம் நாளன்று விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை உலகெங்கிலும்
கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் மதுரையில் காமராசர் பல்கலைக்கழகத்தில் ஒரு சந்திப்பை நடத்த இயலுமா?
இயலுமென்றால் அதற்கான பணிகளைத் தொடங்கலாம்.
http://ten.wikipedia.org/wiki/Main_Page என்ற பக்கத்தில் நமது நிகழ்வைப் பதிவு
செய்தால் விக்கிமீடியா அடையாளச் சின்னம் கொண்ட பொருட்களையும் அவர்கள்
அனுப்புவார்கள். அதைச் சந்திப்பில் பங்கேற்பவர்களுக்குத் தரலாம்.
நீங்கள் களத்தில் இருந்து ஒழுங்குபடுத்த இயலுமா எனச் சொல்லுங்கள். நாங்கள் தொலைவில்
இருந்து உதவுகிறோம். தேவைப்பட்டால் நான் ஒருமுறை மதுரைக்கு வழுகிறேன். மலையாள
விக்கியர்களே மதுரையில் வெற்றியுடன் கூட்டம் நடத்தும்போது நம்மால் இயலாதா?
- சுந்தர்
"That language is an instrument of human reason, and not merely a medium for
the expression of thought, is a truth generally admitted."
- George Boole, quoted in Iverson's Turing Award Lecture