வணக்கம்,
விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமூலம் போன்ற விக்கிமீடியத் திட்டங்களின் ஆண்டுவிழாக் கொண்டாட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டில் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படும். கடந்த இரு ஆண்டுகளாகப் பெருந்தொற்றுக் காரணமாக நேரடி நிகழ்வுகளாகக் கொண்டாடவில்லை. அதன் காரணமாக இந்தாண்டு உலகின் சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட நகரங்களில் கொண்டாடப்பட உள்ளது. இந்திய அளவில் நான்கு இடங்களுள் மதுரையும் ஒன்றாகத் தேர்வாகியுள்ளது.

அதன் பொருட்டு ஆகஸ்ட் 14 அன்று மதுரை அண்ணாநகர் சக்ரா ரெசிடென்சியில் தமிழ் விக்கிமீடியர்களுக்கான கூடல் நடைபெறுகிறது. இணையக் களஞ்சியத்தைத் தமிழில் வளர்க்கும் பலரும் இங்கே சந்திக்கவுள்ளனர். முதல் முறையாகத் தமிழகத்தில் நடைபெறும் இந்த  விக்கிமேனியா கூடலில் விக்கித்திட்டங்களில் ஆர்வமுள்ளவர்களைக் கலந்து கொள்ள அழைக்கிறோம். முன்பதிவுப் படிவம்.

image.png



--
அன்புடன்,
நீச்சல்காரன்