வணக்கம்,
தைப்பூசம் தினத்தன்று, இரண்டாம் கட்டமாக வள்ளுவர் வள்ளலார் வட்டத்தின் 100 ''தமிழ் ❤️ இலச்சினைகள்'' வெளியிடப்பட்டுள்ளது.

https://commons.wikimedia.org/wiki/Category:Tamil_Iconography
 
தமிழர்களின் கலையை உலகுக்குக் கோட்டோவியமாகப் பரப்பும் வகையில், ஓவியர் ஜீவா வரைந்த இலச்சினைகள் விக்கிமீடியா பொதுவகத்தில் பொதுவுரிமையில்  வள்ளுவர் வள்ளலார் வட்டத்தின் சார்பாக வெளியிடப்படுகிறது. 

இது அளவுகளில் தடையில்லாமல் அச்சிடக்கூடிய வகையில், VECTOR வடிவில், svg கோப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இது போன்ற வரைகலையைக் கணித மாதிரிகளில் வெளியிடுவது அனைத்து நுட்பங்களிலும் பயன்படும்.

விக்கிபீடியாவில் கட்டுரை எழுதும் நண்பர்கள் அந்தந்தப் பகுதியில் இதனை இணைக்கலாம். தங்கள் சொந்தப் பயன்பாட்டிற்கும் பயன்படுத்தலாம்.



--
அன்புடன்,
நீச்சல்காரன்