திங்., 19 மார்., 2018, முற்பகல் 5:18க்கு, நீச்சல் காரன் <neechalkaran@gmail.com> எழுதியது:
வணக்கம்,
மக்கள் வரிப்பணத்தில் செய்யப்படும் இஸ்ரோ போன்ற உயர் ஆய்வக அறிக்கையையும் இதுபோல திறமூலமாக விடச்சொல்வது ஏற்புடையதா?


இஸ்ரோவில் செய்யப்படும் அனைத்து ஆய்வுகளுமே அதி உன்னத ரகசியங்கள்  இல்லை.

பொது மக்கள் பயன்பாட்டுக்கான பலவற்றை அவர்கள் உருவாக்கவே செய்வர். அவற்றை பொது வெளியில் விடலாமே. 



ஒரு நாட்டின் நிதியில் உருவானதை பொதுவுரிமையில் விடுவதால் பிற நாட்டினர் பொருளாதாரத்தில் முந்திச்செல்ல மாட்டார்களா?


ஆம். அமெரிக்க பாதுகாப்புத் துறையின் முயற்சியில் உருவான இணையத்தில் வளர்ச்சியால் தான் உலகின் பல நாட்டு மக்கள் வாழ்ந்து வருகின்றனர். நான் உட்பட.

இணையத்தின் அனைத்து உட்கூறு  கட்டமைப்புகளும், ஆய்வுகளும் திறந்த மூலமாக உள்ளதால்தான்  பல்வேறு நாடுகளின் வளர்ச்சியும் சாத்தியமானது.

https://en.wikipedia.org/wiki/History_of_the_Internet

இங்கு காண்க.





திறமூல ஆதரவாளர் என்ற போதும் பொதுநிதியில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் அனைத்தும் பொதுவுரிமையில் வெளியிடுவதை ஏற்பதில் தயக்கமுள்ளது. இடத்திற்கு ஏற்பவும், தேவைக்கு ஏற்பவுமே இதனைத் தீர்மானிக்க வேண்டும் என்பது கருத்து. 


இந்தியாவில் மக்கள் வரிப்பணத்தில் உருவாகும் மென்பொருட்கள், ஆய்வுகள் கட்டற்ற மென்பொருளாக வருவது மிகவும் மிகவும் குறைவாகவே உள்ளது.

இடத்திற்கும், தேவைக்கும்  ஏற்ப இதை தீர்மானிக்க வேண்டும் தான். ஆனால், அதற்காக எதையுமே வெளியிடாமல் இருப்பது ஏற்கத்தக்கது  அல்ல.

உதாரணமாக, த இ க, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், செம்மொழி ஆய்வு நிறுவனம் போன்ற தமிழ் சார்ந்த அரசு நிறுவனங்கள் பல கோடிகள் செலவு செய்வதை அறிவோம். ஆனால் அங்கு நடக்கும் ஆய்வுகள், உருவாகும் மென்பொருட்கள் கட்டற்ற மென்பொருளாக வெளியிட ப் படுவதில்லை. இதனால் ஒருவர் ஏற்கெனவே உருவாக்கிய மென்பொருளை யே மற்றொருவர் மீண்டும் உருவாக்க வேண்டி வருகிறது. இந்த நிலையை அனைவரும் அறிவோம்.

மக்கள் வரிப்பணத்தில் உருவாகும் மென்பொருட்கள், ஆய்வுகள் கட்டற்ற மென்பொருளாக கிடைக்கும் போது, தொடர் வளர்ச்சி ஏற்படும்.

அவ்வாறு கேட்கும் உரிமை வரி செலுத்தும் அனைவருக்கும் உண்டு.

இது தொடர்பான உரையாடலை தொடங்கியமைக்கு  நன்றி.

இன்னும் பேசுவோம். 
ஐயமிருப்பின் தயங்காமல் எழுதுங்கள்.

நன்றி.